Police Department News

செல்லூர் மேம்பாலத்தில் 26-ந்தேதி வரை போக்குவரத்துக்கு தடை

செல்லூர் மேம்பாலத்தில் 26-ந்தேதி வரை போக்குவரத்துக்கு தடை

மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை செல்லூர் தத்தனேரி ரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளையம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் இன்று 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.
கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் – செல்லலாம்.

மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு – சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது – குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.

திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.
மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று – சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.