மதுரையில் புத்தக கண்காட்சி
மதுரையில் புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்த படியாக தமிழகத்தில் மிகப்பெரிய புத்தக கண்காட்சியாக மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சி உள்ளது.
இந்த ஆண்டு புத்தக கண்காட்சி வருகிற 12ந்தேதி முதல் தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. 22ந்தேதி முதல் 10 நாட்கள் வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம், மதுரை மாவட்ட நிர்வாகம் இணைந்து இந்த கண் காட்சியை நடத்துகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகள், பதிப்பகங்கள், எழுத்தாளர்களின் பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாலையில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். அதன்படி இந்த புத்தக கண்காட்சி நடத்தப் படுகிறது. வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும். சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கு வதற்கு புத்தகங்கள் வழி காட்டியாக அமையும் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான, பிடித்தமான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அவர் களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டுள்ளார்.