Police Department News

நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை,

நடைப்பயிற்சி; வழிமறித்த கும்பல்! – நடுரோட்டில் மேலூர் அ.ம.மு.க பிரமுகருக்கு நேர்ந்த கதிமேலூர் அருகே முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவரின் கொலை, அரசியல் போட்டி காரணமாக நிகழ்த்தப்பட்டதா என்று போலீஸார் விசாரணை செய்துவருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளபட்டியைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.கவில் இருந்த போது கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி ஜெயலலிதா இறப்பிற்குப் பின் அ.ம.மு.க.,விற்குச் சென்றதால் அசோகனும் அ.ம.மு.கவிற்கு மாறிவிட்டார்.தற்போது அ.ம.மு.க.,வில் பிரதிநிதியாக இருந்துவரும் இவர் மேலூர் டு அழகர்கோவில் செல்லும் சாலையில் எப்போதும் போல் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். நண்பர்களுடன் நடைப்பயிற்சியில் இருந்த அவரை, சுமார் 8 பேர்கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாகத் தாக்கி குத்திக் கொலை செய்துள்ளது.இதில், ரத்த வெள்ளத்தில் அசோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி, சுபாஷ் சம்பவ இடத்தில் போலீஸாருடன் ஆய்வு செய்தார். அசோகனின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், அசோகனின் உடலை மேலூர் அரசு மருத்துவமனையிலிருந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசோகனின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். `கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் மேலூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலூர் பகுதியில் முக்கிய அரசியல் பிரமுகராக வலம்வந்த அசோகன் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர், அரசியல் போட்டி காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.