Police Department News

வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!’ விருத்தாசலத்தில்

வயிற்றுக்குள் துணியை வைத்துத் தைத்த மருத்துவர்கள்!' விருத்தாசலத்தில் இளம்பெண் உயிரிழப்புபிரியா சாவுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டருங்கதான் காரணம். அதனால அவங்கமேல உடனே நடவடிக்கை எடுக்கணும்’ எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (25). பொக்லைன் இயந்திரம் ஓட்டும் தொழிலாளியான இவர், பிரியா என்ற பெண்ணை 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார். பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த 27-ம் தேதி பிரசவத்துக்காக அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறியதால், பிரியாவின் கணவரும் அதற்கு சம்மதித்திருக்கிறார்.அதையடுத்து அன்று இரவே அறுவை சிகிச்சை செய்ததில் பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை முடிந்ததும் பிரியா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், நீண்ட நேரமாகியும் பிரியாவுக்கு நினைவு திரும்பாததால் அவரின் கணவர் மருத்துவர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் உடனே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரியாவின் கணவரும், அவரது உறவினர்களும் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.அங்கு பிரியாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதோடு, தேவைப்பட்டால் அவரது கருப்பையையும் அகற்ற வேண்டியிருக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர். தொடர்ந்து பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் துணி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதை எடுத்துவிட்டு அறுவை சிகிச்சையை முடித்த நிலையிலும், சிகிச்சை பலனளிக்காமல் பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரியாவின் கணவர் ராஜ்குமார், `விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரியாவின் வயிற்றில் டாக்டருங்க துணியை வெச்சி தச்சதாலதான் அவருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்துபோச்சு'னு ஜிப்மர் டாக்டருங்க சொன்னாங்க. அதனால்தான் என் பிரியா என்னை விட்டுப் போயிட்டா. பச்சப் புள்ளைய எங்கிட்ட கொடுத்துட்டு அவ போயிட்டா. பிரியா சாவுக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனை டாக்டருங்கதான் காரணம். அதனால அவங்கமேல உடனே நடவடிக்கை எடுக்கணும். அதுவரை நான் ஓயமாட்டேன்” என்று கதறினார்.இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரியாவின் உறவினர்கள் விருத்தாசலம் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு சென்ற விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, டி.எஸ்.பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர்கள் உறுதி அளித்தால் அங்கிருந்து கலைந்து சென்றனர் பிரியாவின் உறவினர்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.