UPI ல் புதிய மாற்றம்! இனி 2000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப முடியாது!
ஆன்லைன் மோசடியை தடுக்க முதல் முறை பணம் அனுப்பும் போது ரூ. 2,000க்கு மேல் ஆன்லைன் வழியாக அனுப்ப முடியாது என்ற புதிய நடைமுறையை அரசு கொண்டுவர உள்ளது
ஆன்லைனில் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் UPI சம்பந்தமாக மோசடிகள் அதிகரித்து வருகிறது. இப்படி இணைய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் UPI ஐடிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசாங்கம் விரும்புகிறது. இந்நிலையில், இந்த மோசடிகளை தடுக்க முதல் முறையாக பணம் அனுப்பும் போது ரூபாய் 2,000 க்கு மேல் அனுப்ப முடியாது. இரண்டு பயனர்களுக்கு இடையே முதல் முறை பரிவர்த்தனை செய்த பிறகு நான்கு மணிநேரத்திற்கு பிறகே மீண்டும் பணம் அனுப்ப முடியும் என்ற நடைமுறையை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ரூ.2,000க்கு மேல் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இரண்டு பயனர்களுக்கு இடையேயான முதல் பரிவர்த்தனைக்கு பிறகு நான்கு மணிநேர காத்திருப்பு நேரத்தை உருவாக்க அரசு பரிசீலித்து வருகிறது. இந்த புதிய முறை யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மட்டுமின்றி, உடனடி கட்டண சேவை (ஐஎம்பிஎஸ்) மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) போன்ற பிற டிஜிட்டல் கட்டண முறைகளையும் உள்ளடக்கும் என கூறப்படுகிறது.