Police Department News

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட்… வாலிபரை பிடித்து அபராதம் விதித்த போலீசார்

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட்… வாலிபரை பிடித்து அபராதம் விதித்த போலீசார்

தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.
இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published.