Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஸ்ரீனிவாச பெருமாள் M.A..MBA அவர்கள் புகையிலை, குட்கா, பான் மசாலா ஆகிய பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து செய்து கண்காணிக்க உத்தரவிட்டதன் பேரில்

நேற்று 23.12.2023 தேதி திருச்சுழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களது தனிப்படையினருக்கு கர்நாடகா மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி

எம் ரெட்டியபட்டி காவல் நிலைய தனிபிரிவு காவலர் மற்றும் நிலைய காவலர் இருவரும் எம் ரெட்டியபட்டி காவல் நிலைய சரகம்

காணா விளக்கு அருப்புக்கோட்டை- சாயல்குடி ரோட்டில் வாகன சோதனை செய்தபோது TN 60 P 2666 ASHOK LEYLAND என்ற வாகனத்தில் கணேஷ் புகையிலை, கூல்- லிப், விமல் பாக்கு மற்றும் விமல் பான் மசாலா ஆகிய புகையிலை பொருட்கள் அடங்கிய 56 சாக்கு மூட்டையில் சுமார் 827 கிலோகிராம் கொண்ட சுமார் 4 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,

அதனை கைப்பற்றியும் மேற்படி வாகனத்தை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சோனை மகன் சரவணன்(46/23) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.