Police Department News

போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து 99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல்

போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து 99 நாட்களில் ரூ.17.85 லட்சம் அபராதம் வசூல்

உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து பெட்டிக்கடைகளில் நடத்திய ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை வைத்திருந்த கடைகளுக்கு ரூ.17.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நவம்பர் 24 முதல் பிப்ரவரி 29 வரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து பெட்டிக்கடைகள் மற்றும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனை நடத்தினர் 283 பெட்டிக்கடைகளில் 677 கிலோ எடையுள்ள. ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கைபற்றப்பட்டு அழிக்கப்பட்டது இது தொடர்பாக 277 கடைகளுக்கு ரூ.17.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது
238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் திரு. ஜெயராம பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது பெட்டிக்கடைகளில் முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது கண்டு பிடிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் அபராதமும் 15 நாட்கள் கடை மூடப்படும்

இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ. 50 ஆயிரம் அபராதமும் கடை ஒரு மாதம் வரை சீல் வைக்கப்படும் மூன்றாவது முறையும் தவறு செய்தால் ரூ. ஒரு லட்சம் அபராதமும் 3 மாதங்களுக்கு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.