Police Department News

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.B.விஷ்ணு சந்திரன், IAS., ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50,000/-க்கும் மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் துணை இராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில் நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.