கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி ஒரு ரோந்து பணி செல்லும் போது பள்ளி மாணவர்கள் அனைவரும் வார இறுதியில் வண்ண உடைகளை அணிந்து சென்றுள்ளனர் ஆனால் ஒரு மாணவன் மட்டும் சீருடையில் சென்றுள்ளார். அவரை விசாரித்தபோது தனக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே உள்ளது என்று தமது ஏழ்மையை குறிப்பிட்டுள்ளார் இதனை அறிந்த உதவி ஆய்வாளர் அவருக்கு இரண்டு ஜோடி புத்தாடைகளை பரிசளித்தார்.
Related Articles
மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மதுரை, மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, மதுரையில் பாலியல் குற்றவாளி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு அஞ்சு வீடு, ராஜீவ் காந்தி நகர், உலகனேரி, மதுரை என்ற முகவரியில் வசித்து வருபவர் வன்னியப்பெருமாள் என்பவருடைய மகனாகிய அபினேஷ், ஆண், வயது 23/2021, என்பவர் மதுரை மாநகரில் இளஞ்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்ட விரோதமான நடவடிக்கைகளை […]
குளித்தலை அருகே பேருந்தை சேதப்படுத்தியதாக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக கைது செய்யப்பட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நச்சலூரில் இருந்து குளித்தலை நோக்கி சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை நங்கவரம் அருகே மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேருந்தை ஓட்டிவந்த தற்காலிக ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் வசித்து வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரை குளித்தலை காவல்துறையினர் கைது செய்தனர்
தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி
தீவிரவாதம் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கு பயிற்சி கோவை மாநகரில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீசாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறார். இதில் போலீசாருக்கான உடற்பயிற்சிக்கூடம், வாகனங்களில் ‘மினி’ நூலகம், போலீசாரின் குடும்பத்தினருக்கான விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தீவிரவாதம் தடுப்பது தொடர்பான […]