Police Recruitment

காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு

காரை நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிய திருச்சி சப்-இன்ஸ்பெக்டரின் ஐந்து பவுன் சங்கிலி திருட்டு

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் வயது 54, இவர் கடந்த 24ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தனது நண்பர்கள் குறிஞ்சி செல்வம் சதீஷ்குமார் ஆகியவுடன் காரில்
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார் ப்போது கருடபெட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே படுத்து மூவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர் அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் வெங்கடேஷ் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் செயினைகளை நைசாக திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்
பிறகு எழுந்து பார்த்த வெங்கடேஷ் கழுத்தில் தங்கச் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல் அதிகாரியிடமே கைவரிசை காட்டிய சம்பவம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.