இந்து முன்னணி சார்பில் மதுரை மாநகரில் வைக்கப்பட்ட 210 விநாயகர் சிலைகள் நான்கு மாசிகளில் ஊர்வலமாக இன்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது
மதுரை இந்து முன்னணி விநாயகர் விஜர்சன விழாவில் கலந்து கொள்ள மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மாநில துணைத் தலைவர் வக்கீல் சீனிவாசன் , மாநிலச் செயலாளர் சேவுகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் அருகே விநாயகர் ரிதர்சன ஊர்வலம் கடைசி சுப்ரமணியம் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார் பின்னர் 4 மாசிவீதிகளின் வழியாக ஊர்வலம் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.10 மணியளவில் வைகையாற்றில் கரைக்கப்பட்டது.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மூன்று துணை ஆணையர்கள், ஆறு உதவி ஆணையர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வஜ்ரா வாகனம் அதிவிரைவு, அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்குமதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 210 விநாயகர் சிலைகள் ஊர்வமாக கொண்டுவரப்பட்டு விளக்கத்துடன் இருந்து நான்கு மாசி வீதி வழியாக வைகை ஆற்றில் சென்று கரைக்கப்பட்டது.
விநாயகர் ஊர்வலம் செல்லும் வழியில் தெற்குமாசி வீதி பகுதியில் ஜாவே அத் பள்ளிவாசல் உள்ளதால் அங்கு வஜ்ராயுதம் வாகனம் நிறுத்தப்பட்டு அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர் கிரையேன்ம மூலம் விநாயகர் ஊர்வலம் செல்வதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலமாசி வீதியில் உள்ள சின்னப்பள்ளி வாசல் பகுதிகளும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மாலை 6:15 நிமிடத்திற்கு விநாயகர் ஊர்வலம் நிறுத்தப்பட்டு பள்ளிவாசல் தொழுகை முடித்த பின் மீண்டும் அரை மணி நேரம் கழித்து விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
விநாயகர் ஊர்வலம் நடைபெற்ற தெற்கு மாசி வீதி பகுதியில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சாரா மற்றும் மேத்யூ விநாயகர் ஊர்வலத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.வெளிநாட்டுப் பயணிகள் விநாயகர் ஊர்வலத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தது பார்வையாளர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் சென்ற விநாயகர் ஊர்வலம் சிம்மக்கல் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் பாதுகாப்பாக விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டது
மதுரை மாநகர காவல் ஆணையர் எவ்வித அசம்பாவமும் நடைபெறாமல் சிறப்பான பாதுகாப்பாளர்களின் மூலம் விநாயகர் ஊர்வலத்தை அமைதியாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார்.