மதுரை கூடல் புதூர் பகுதியில் செல்போனில் அழைத்து கஞ்சா விற்பனை
மதுரை கூடல்புதூர் காவல்நிலையம் சார்பு ஆய்வாளர் தினேஷ் இவருக்கு விளாங்குடி காமாக்ஷிநகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் தினேஷ் அவர்களின் தலைமையில் போலிசார் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றபோது போலிசாரை பார்த்ததும் அங்கிருந்த இரு வாலிபர்கள் தப்பி ஓட எத்தனித்தனர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலிசார் விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் பழைய விளாங்குடியை சேர்ந்த மனோஜ்குமார், வயது 20, கொன்னவான் சாலையை சேர்ந்த ரமேஷ் என்ற மொக்க வயது 24, என தெரிய வந்தது. இவர்கள் செல்போனில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து கஞ்சா விற்பனை செய்வதும் உறுதியானது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிசார் இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்த கஞ்சா ரொக்கப்பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.