Police Department News

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி போலிஸ் எஸ்.ஐ., பலி ஏ.டி.ஜி.பி., அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி போலிஸ் எஸ்.ஐ., பலி ஏ.டி.ஜி.பி., அஞ்சலி

கமுதி அருகே கே. நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது 36, இவர் பரமக்குடி நகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்தார்.

இவர் எஸ்.ஐ., கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பரமக்குடி நகர் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, மன்னர் மருதுபாண்டியர் விழா ஆகியவற்றிற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கொடிக்கம்பம் கம்பி அருகில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் மின் கசிவில் உராசியதால் எஸ்.ஐ ., சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் இறந்தார்

இவருக்கு மனைவி விஜயலட்சுமி ஒரு மகன் மகள் உள்ளனர் 2011ல் போலீசாராக சேர்ந்து 2016 பிப்ரவரி 26 முதல் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வந்தார்

தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

அவரது உடல் கமுதி அருகே கே நெடுங்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த சின்கா, டி.ஐ.ஜி., அபிநவ் குமார் எஸ்.பி., சந்தீஸ் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

பின் 21 குண்டுகள் முழங்க எஸ்.ஐ., சரவணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது முதல்வர் ஸ்டாலின் எஸ்.ஐ., பலியானதற்கு இரங்கல் தெரிவித்தவுடன் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.