டூவீலர் தாறுமாறாக ஓட்டிய சிறுவனின் உறவினர் கைது
தேவதானப்பட்டியில் டூவீலரின் அதிக ஒளி எழுப்பும்படி தாறுமாறாக சென்ற சிறுவனை போலீசார் அறிவுறுத்திய நிலையில் லைசன்ஸ் பெறாத சிறுவர்களுக்கு டூவீலர் கொடுத்த அவரது மாமாவை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த சிறுவன் லைசன்ஸ் எடுக்கும் வயது எட்டவில்லை இவர் டூவீலரில் இருந்து சைலன்ஸரை மாற்றிவிட்டு அலறல் ஒலி எழுப்பும் சைலன்சரை போர்த்திக்கொண்டு தேவதானப்பட்டி வைகை அணை ரோட்டில் தீப்பொறி பறக்க தாறுமாறாக டூவீலர் ஓட்டி சென்றார் அப்பகுதியில் ரரோந்து சென்ற தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை டூவீலரை கைப்பற்றினார் சிறுவக்கு டூவீலர் கொடுத்த உரிமையாளரான அவரது மாமா மணி 27 வயது என்பவரை போலீசார் கைது செய்தனர் போலீசார் கூறுகையில் தேவதானப்பட்டி தங்களை ரோமியோக்களாக நினைத்து கொண்டு சிலர் ஓசி டூவீலரை ஓட்டிக்கொண்டு பஸ் ஸ்டாப் , அரிசி கடைப் பகுதியில் கெத்து காட்டுவதற்காக புதிதாக சைலன்சர் பொருத்தி டூ வீலரை அலறவிடுகின்றனர்இதனால் ரோட்டில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.