மதுரை மாநகர மதுவிலக்கு பிரிவு போலிசாரின் விழிப்புணர்வு நிகழ்சி
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் ANTI DRUG CLUB அமைப்பு Don Bosco ITI கல்லூரி -ஜவகர்புரம் மற்றும் GOVERNMENT ITI கல்லூரி – கே.புதூர் ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள்கள் என்றால் என்ன என்பது பற்றியும் போதைப் பொருள் பழக்கம் மற்றும் புழக்கம் அதிகரிக்கும் போது மனித சமுதாயம் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அடிமையாகாமல் தடுக்க என்ன செய்யலாம் மற்றும் Anti Drug Club ன் நோக்கம் அதன் செயல்பாடு மற்றும் போதை பொருள்கள் பரவாமல் தடுக்க மாணவர்களால் காவல்துறைக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை ஆய்வாளர் திரு.அருள் செந்தில் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பு ஆய்வாளர் திருமதி.மீனாள் முதல் நிலை காவலர் திரு.வெங்கடேஷ்பாபு மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.