
கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருட்டு
மதுரை பைபாஸ் ரோடு சாலினி தெருவை சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்வர் (31). இவர் இரவு காரில் அண்ணா நகருக்கு சென்றார். அவர் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பேக் மற்றும் 8 சாவிகளை திருடி சென்றனர். மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (30). இவர் காரில் கே.கே.நகருக்கு வந்தார். அப்போது மில்லினியம் மால் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் பின்பக்க கதவை உடைத்து ஏ.டி.எம். கார்டு, 2 செல்போன்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 700 ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆதித்ய விக்னேஷ்வர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
