
விளக்கத்துடன் அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களுக்ககுஐ. எஸ். ஓ.சான்று
மார்ச் 16
மதுரையில், விளக்குத்தூண், அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களுக்கு ஐ. எஸ். ஓ சான்றிதழ் வழங்கப்பட்டது.
10 போலீஸ் நிலையங்கள்
உலக தரம் வாய்ந்த ஐ எஸ் ஓ சான்றிதழ் மற்றும் மத்திய அரசின் குவாலிட்டி கவுன்சில்ஆப் இந்தியா நிறுவனம் வழங்கும் சான்றிதழ்களை பெறுவதற்கான மதுரை நகரில் உள்ள 27 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன.
அதன்படி, விளக்குத்தூண், கீரைத்துறை, தெற்கு வாசல், ஜெய்ஹிந்த்புரம், சுப்ரமணியபுரம், எஸ்.எஸ். காலனி
கூடல் புதூர், கே புதூர், அண்ணா நகர் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு இந்த போலீஸ் நிலையங்களில் ஆறு மாதமாக மறுசீரமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள் நடந்தன. மேலும் போலீஸ் நிலையங்களில் வளாக உட்கட்டமைப்பு, வழக்கு கோப்புகள், ஆவணங்களை எளிதில் கையாளுதல், புகார் அளிக்க வரும் மக்கள் விசாரணை முடிந்து அமைதியுடன் திரும்பிச் செல்ல பார்வையாளர் அறைகளை மாற்றி அமைத்தல், பதிவான வழக்குகளை துரிதமாக விசாரித்து
குறித்த காலத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை போன்ற நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
கமிஷனர்பாராட்டு
அதன் அடிப்படையில் அண்ணாநகர் உள்பட 10 போலீஸ் நிலையத்திற்கு ஐ. எஸ். ஒ. சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்காக கடினமாக உழைத்த போலீஸ் துணை கமிஷனர்கள்
இனிகோதிவ்யன், மதிவாணன், வனிதா, மற்றும் உதவிகமிஷனர்கள்,
இன்ஸ்பெக்டர்கள்,
சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆகியோரை, மதுரை மாநகரபோலீஸ்கமிஷனர், திரு.ஜே. லோகநாதன்பாராட்டினார்.



