நண்பன் கொலை வழக்கில் 5000 அபராதம், 7 ஆண்டு சிறை தண்டனை..!
சிவகங்கை வைரவன்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் கடந்த 2013-ம் வருடம் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் விஜயபாண்டியன் ஆகிய 2பேருடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் ஆண்டியப்பனை மேற்படி நபர்கள் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி, கை மற்றும் ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் படுகாயமடைந்த ஆண்டியப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆண்டியப்பன் 05.05.13 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மற்றும் விஜயபாண்டியன் மீது u/s. 294(b), 323, 324, 506(ii) IPC – ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆண்டியப்பன் 12.05.2013 அன்று இறந்து விடவே போலீசார் மேற்படி எதிரிகளின் மீது u/s. 294(b), 323, 324, 506(ii) @ 302 IPC – ன் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடந்து வந்த நிலையில்,
இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 18.02.2020-ம் தேதி மாவட்ட மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி திரு.ரபி அவர்கள் மேற்படி எதிரியான 2 நபருக்கும் 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5000அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.