பூந்தமல்லி பகுதியில் ஆட்டோவில் கத்தியுடன் சென்ற தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று பிடித்த பூந்தமல்லி உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் குழுவினரை காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
26.02.2020 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் , சென்னீர்குப்பம், ஆவடி ரோடு, SA பொறியியல் கல்லூரி அருகில் T-12 பூந்தமல்லி காவல் நிலைய அதிகாரிகள் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அவ்வழியே சென்ற TN14 U 0398 என்ற ஆட்டோ நிற்காமல் சென்றதால், அதனை அதிகாரிகள் துரத்தி சென்றனர். இதைப்பார்த்த T-5 திருவேற்காடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.M.சுரேஷ்பாபு என்பவர் அவரது இருசக்கர வாகனத்திலும், அவ்வழியே சென்ற கண்ணபாளையம் பஞ்சாயத்து தலைவர் திரு.V.ஆதிகேசவன் என்பவர் அவரது இன்னோவா காரிலும் துரத்தி சென்று, ஆட்டோவை நிறுத்தினார். உடனே காவல் குழுவினர் அவர்களை பிடிக்க முற்பட்டபோது, ஆட்டோவில் இருந்த 4 பேரில் 3 பேர் தப்பியோடவே ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
விசாரணையில், பிடிபட்ட நபர் மாலிக் பாஷா, வ/23, த/பெ.கலீம் பாஷா, J.J நகர் 3வது தெரு, சென்னீர்குப்பம் என்பதும், தப்பிச் சென்ற நபர்கள் 1.ராஜேஷ், 2.சபரி, 3.செல்வம் என்பதும் தெரியவந்தது. ஆட்டோவில் இருந்து கத்திகள்-2 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் பிடிபட்ட நபர் உட்பட 4 பேரும் வழிப்பறி குற்றவாளிகள் என்பது தெரியவந்த்து. பிடிபட்ட மாலிக் பாஷா என்பவர் கொடுத்த தகவலின்பேரில், மேற்படி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி முன்று (எ) முனுசாமி, வ/19, த/பெ.செல்வம், எண்.2/18, பாரதி நகர், மேட்டுப்பாளையம், ஆவடி, சென்னை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இரவு பணியின்போது, விழிப்புடன் செயல்பட்டு சுமார் 7 கிலோ மீட்டர் துரத்திச் சென்று குற்றவாளியை பிடித்த T-12 பூந்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு.S.ஆனந்தகுமார், திரு.K.சுரேஷ், முதல்நிலைக் காவலர் திரு.K.ஶ்ரீதர் (மு.நி.கா. 36497), T-5 திருவேற்காடு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.M.சுரேஷ்பாபு (மு.நி.கா.43617), ஊர்க்காவல் படை காவலர் திரு.G.எல்லப்பன் (HG 1729) மற்றும் பஞ்சாயத்து தலைவர் திரு.ஆதிகேசவன் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 27.02.2020 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.