பெசண்ட் நகர் கடற்கரை
தஞ்சாவூர் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் தனது எட்டு மாத குழந்தையுடன் கடற்கரை ஓர நடைபாதையில் உறங்குகின்றனர்.
திடீரென்று தாய் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த கணம் அருகிலிருந்த தன் குழந்தையை காணாததால் பெரும் பதட்டதிற்குள்ளாகிறார். உடனே தன் கணவனை எழுப்பிவிட்டு கடற்கரை அருகிலுள்ள பகுதிகள் முழுவதும் தேடுகின்றனர்.
மனம் வெதும்பி கடைசியில் அரக்கபரக்க அருகிலுள்ள காவல்நிலையத்தில் கண்ணீருடன் ஓடி நடந்த விவரத்தை கூறுகின்றனர். விவரத்தை பெற்ற காவல்துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு துரிதமாகிறது. செய்தி ஒயர்லெஸ் மூலமாக அனைத்து அதிகாரிகளுக்கும் பறக்கிறது.
ஒட்டுமொத்த இரவு நேர காவல் ஆளினர்களுடன் அதிகாரிகளும் களத்தில் இறங்குகின்றர். விவரத்தை தெரிந்த எங்கள் மரியாதைக்குரிய சென்னை காவல் ஆணையர் அவர்களும் குழந்தை கிடக்க பெறும்வரை அடிக்கடி அவர்களை அழைத்து ஆலோசனைகள் கூறி வழிநடத்துகிறார்.
அடையாறு மாவட்ட துணை காவல் ஆணையர் திரு.பகலவன் IPS தலைமையிலான தனிப்படை பம்பரமாக சுழல ஆரமிக்கிறது.
காவல்துறையின் மூடாத மூன்றாம் கண் துணைக்கு உடன்வருகிறது. பெசண்ட் நகர் முதல் ஜாகீர்கான் பேட்டை வரை கிட்டதட்ட 150 cctvக்களை அலசி ஆராய்ந்து காணாமல் போன குழந்தையை 36 மணி நேரத்தில் நல்ல முறையில் காப்பாற்றினர்.