Police Department News

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்ததாக வடமாநில தொழிலாளர்கள் இருவர் கைது

ஒடிசா மாநில தலைமைச் செயலகத்துக்கு தவறான தகவல் அளித்த குற்றச்சாட்டில் வடமாநில தொழிலாளர்கள் இருவரை சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கவுண்டனூரில் தங்கி பெருந்துரை சிப்காட்டில் கூலி வேலை பார்த்து வரும் இரு வடமாநில தொழிலாளர்கள் திரிநாத் ரூட், சுனில் ஜெனா ஆகியோராவர்.

ஊரடங்கு நிமித்தமாக சிப்காட்டில் அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவுப்படி வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ஆனால் இருவரும் ஒடிசா அரசு தலைமைச் செயலகத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உணவு உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்று கூறியதோடு மெசேஜும் அனுப்பியுள்ளனர்.

உடனே ஒடிசா மாநில தலைமைச் செயலக அதிகாரிகள் ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி சென்னிமலை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் இது தொடர்பாக நேரில் சென்று விசாரித்ததில் இரு வடநாட்டுத் தொழிலாளர்களும் பொய்த்தகவலை அனுப்பியதாகத் தெரியவர இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.