மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை காவல் உதவி ஆணையர் மீட்டார்.
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு. ஜஸ்டின் பிரபாகரன் அவர்களின் முழு முயற்சியால் இன்று 23.04.2020- ம் தேதி மதுரை மாநகரில் மனநலம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரால் முற்றிலும் கைவிடப்பட்ட 19 நபர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அக்க்ஷயா டிரஸ்ட் மூலம் கிடைத்திட வழிவகை செய்த பிறகு ஒப்படைத்தார். காவல் ஆணையர் அவர்கள் காவல் உதவி ஆணையரை பாராட்டினார்.