தமிழ்நாடு அரசின் காவல்துறையின் வழக்கமான சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றங்கள் தொடர்பான பணிகளோடு புதிதாக சேர்ந்திருக்கும் பணிகள்:
- கொரானா வேடமிட்டு எச்சரித்தல்!
- நாடகம் செட்டப் செய்து பயமுறுத்துதல்!
- வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்தல்!
- வாகனங்கள் பறிமுதல் செய்தல்!
( கிட்டத்தட்ட 1 லட்சம்!) - அந்த வாகனங்களைப் பாதுகாத்தல்!
- அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தல்!
- ஊரடங்கை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்தல்!
( கிட்டத்தட்ட 3 லட்சம்!) - தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளைப் பாதுகாத்தல்!
- காய்கறி, இறைச்சி சந்தைகளில் கண்காணித்தல்
- ஊரடங்கை மீறி திறக்கப்படும் கடைகளை அதிகாரிகள் சீல் வைக்கும்போது உடனிருத்தல்!
- சிகிச்சையிலிருந்து பாதியில் தப்பியோடும் நோயாளிகளை தனிப்படை அமைத்து பிடித்து வருதல்!
- மதுக்கடைகளை உடைத்துத் திருடுபவர்களை வளைத்துப் பிடித்தல்!
- அந்த மது பாட்டில்களை இடம் மாற்றும்போது பாதுகாப்பாக இருத்தல்!
- இடம் மாற்றப்பட்ட மது பாட்டில்களை இரவு பகலாக பாதுகாத்தல்!
- ட்ரோன் பறக்கவிட்டு கேரம் போர்டு, கிரிக்கெட் ஆடும் தறுதலைகளை வளைத்துப் பிடித்தல்!
- கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களைத் தேடிப் பிடித்தல்!
- கொரானாவில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கைது செய்தல்!
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று திரும்புபவர்களுக்கு வாசலில் நின்று கைத் தட்டுதல்
- 5 பேர்களுக்கு மேல் கூடுகிறார்களா என்று நகர் முழுவதும் ரோந்து வந்து கண்காணித்தல்
- சிறப்பு ரயிலோ, சிறப்புப் பேருந்தோ விடப்பட்டால் அதற்குப் பாதுகாப்புப் பணிக்குச் செல்தல்!
இவையெல்லாம் கொரானாவால் சுமக்கும் கூடுதல் பொறுப்புகள்! மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டால் இவர்களின் பணிச் சுமை பாதியாகக் குறையும்.
பல சிறிய நாடுகள் மிக அதிகமான போலீஸ் எண்ணிக்கை கொண்டிருக்கிறது. ஆனால் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் போலீஸ் எண்ணிக்கை குறைவு.
ஒரு லட்சம் பேருக்கு 150 போலீஸ்தான் இங்கே! அதாவது 632 பேருக்கு ஒரு போலீஸ்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏழு கோடியை மக்கள் தொகை தாண்டிவிட்டது. தமிழகப் போலீசில் இன்னும் பணி நிரப்பப்படாத காலியிடங்கள் எல்லா ரேங்குகளிலும் உள்ளன.
குறைவான எண்ணிக்கையுடன் கூடுதல் பொறுப்புகளையும் சுமந்து பம்பரமாக சுழல்கிறார்கள். அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். ஒரு பதட்டத்துடன், பயத்துடன்தான் அந்தக் குடும்பம் அவர்களைப் பணிக்கு அனுப்பி வைக்கிறது.
நமது காவல்துறைக்கு அதிக பணிச் சுமை தராமலிருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை!
தமிழக காவல்துறைக்கு ஒரு ராயல் சல்யூட்!.