Police Department News

ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை காவல் ஆணையர்

ஆட்டோ ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மதுரை காவல் ஆணையர்

மதுரையில் கர்பணி பெண்ணை இலவசமாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்று திரும்பிய ஆட்டோ ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்த மதுரை மாநகர காவல் ஆணையர், காவல் துறையினரின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

மதுரையில் கொரோனா முழு ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். வருவாய் குறைந்த நிலையிலும் ராமகிருஷ்ணன் என்பவர் இப்போது கர்பணி பெண்களுக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அண்மையில் கர்பணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த போது அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று கட்டணம் வாங்காமல் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது மதுரை கோரிப்பாளையம் போக்கு வரத்து சந்திப்பில் போக்கு வரத்து காவலர்கள் ஆட்டோவை மடக்கி ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி 500/− அபராதமாக விதித்துள்ளனர். கர்பணி பெண்ணிற்கு உதவ சென்ற தன்னிடத்தில் காவலர்கள் நடந்து கொண்ட விதத்தால் ராமகிருஷ்ணன் மனம் உடைந்து போனார். இந்த சம்பவம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலானது.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களும் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆட்டோ ஓட்டுநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய காவல் ஆணையர் காவலரின் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் ரத்து செய்தார்.

பொது மக்களிடத்தில் கண்ணியத்துடனும் அன்புடனும் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும் என்று மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.