Police Department News

வரலெக்ஷிமி நோம்பன்று கணவனை கொன்ற மனைவி கைது

வரலெக்ஷிமி நோம்பன்று

மதுரை, திருமங்கலத்தில் பாலியல் தொல்லை தந்ததால் கணவனை கொலை செய்த மனைவி, வாக்கு மூலத்தில் ஒப்புக் கொண்டதால் மனைவி உட்பட மூவர் கைது.

மதுரை மாவட்டம், திருமங்கலம், மாயாண்டி நகரை சேர்ந்த இளங்கோ மகன் சுந்தர் என்ற சுதீர் வயது 34 , இவரது மனைவி அருள்செல்வி, இவர்களுக்கு திருமணமாகி எட்டு வருடங்களான நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஜெயஶ்ரீ என்ற ஒரு மகளும் உள்ளார்

சுந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தற்காலிக உதவியாளராக பணியாற்றி வருகிறார். மனைவி அருள்செல்வி திருமங்கலத்தில் கீழசெம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

சுந்தர் அடிக்கடி மது அருந்தி விட்டு வருவதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில் கடந்த 31 ம் தேதி வெள்ளிக் கிழமை வரலெக்ஷிமி நோம்பன்று கட்டிலில் படுத்திருந்த தனது கணவர் கீழே மயங்கி விழுந்து விட்டதாக கூறி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு எடுத்து சென்றனர் அங்கே இவரை பரிசோதனை செய்த மருத்துவர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் உடம்பிலும், விறைப்பையிலும் இரத்தம் உறைந்து இருப்பதால் இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அருகிலுள்ள E.1 நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவல் அறிந்த காவல் துறையினர் துணை கண்காணிப்பாளர் அருண் அவர்களின் தலைமையில் E1.நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பரமேஸ்வரி அவர்கள் விசாரணையை தொடங்கினர், விசாரணையில் மனைவி அருள்செல்வி கூறுகையில் தன் கணவர் அடிக்கடி மது போதையில் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், குறிப்பாக தன்னுடைய 5 வயது மகள் முன்னிலையிலேயே செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் பின்னர் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அருள்செல்வி , இது பற்றி தனது சித்தி பாலாமணியிடம் கூறிய போது, இப்படிபட்ட கணவன் தேவையில்லை, அவனை கொன்று விடு என கூறியுள்ளார், இதனையடுத்து, 30 ந் தேதி வியாழக்கிழமை இரவு தனது கணவன் சுந்தர் மது போதையில் இருந்த போது தனது சித்தி பாலாமணி, சித்தியின் மகன் சுமோர் ஆகியோருடன் இணைந்து கணவனை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து காவல் துறையினர் இந்த மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்

பொதுவாக மனைவிமார்கள் தனது கணவன்மார்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வரலெக்ஷிமி நோம்பிருந்து பூஜை செய்வது வழக்கம் ஆனால் வரலெக்ஷிமி நோம்பன்றே தன் கணவனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.