சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன், மகனோடு சேர்த்து ஐந்து பேர் கைது
மதுரையில் சொத்து தொடர்பான தகராறில் தந்தையை ஓட ஓட விரட்டி கொலை செய்த மகன், மகனுடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்கள் கைது.
மதுரை, தெற்கு வெளி வீதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் மணி வயது 57/2020 இவர் தனது இரண்டாவது மனைவி தனலெக்ஷிமியுடன் வசித்து வருகிறார், இவர்களுக்கு சரவணன் என்ற 3 வயது மகன் இருக்கிறான் மணி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார், இவரது மனைவி தனலெக்ஷிமி வீட்டில் வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். மணிக்கு, வில்லாபுரத்திலும், திண்டுக்கல் ரோட்டிலும் வீடு சொத்துக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் இவரது மூத்த மனைவி ராஜாத்திக்கு கார்த்திகேயன் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.
கார்த்திகேயன் வில்லாபுரத்தில் ஒயின் ஷாப் நடத்தி வருகிறார், மகள் சுகன்யா வெளிநாட்டில் வசித்து வருகிறார்,
இந்நிலையில் வில்லாபுரத்தில் இருக்கும் சொத்தை கேட்டு தந்தையிடம் கார்த்திகேயன் தெடர்ந்து தகராறு செய்து வந்தார்,
கடந்த 21 ந் தேதி இரவு 8.30 மணியளவில் மணி தனது வீட்டிற்கு இரு சக்ர வாகனத்தில் வரும் போது மூத்த மனைவியின் மகன் கார்திகேயனும், அவனது நண்பரும் வழி மறித்து தகராறு செய்தார்கள் அதன் பின் இதோடு செத்து தொலை என கூறியபடியே மறைத்து வைத்திருந்த வாள் போன்ற கத்தியை எடுத்து சரமாரி வெட்டியுள்ளார், அவரது நண்பரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விலாவில் குத்தி சாய்தார்கள்,
இந்த சம்பவத்தை பார்த்த அவரது இரண்டாம் மனைவி, மற்றும் அவரது உறவினர்கள் ஓடி வர யாராவது என்னை பிடிக்க நினைத்தால் அவர்களுக்கும் இந்த நிலைதான் என கூறிக் கொண்டே தப்பி ஓடினர்.
சம்பவத்தை நேரில் பார்த்த அவரின் இரண்டாவது மனைவி தனது தந்தையை அழைத்துக் கொண்டு தெற்கு வாசல் B 5, காவல் நிலையத்தில் , தனது கணவரை கொலை செய்தவர்களை பிடித்து கைது செய்து தண்டனை பெற்றுத் தரும்படி புகார் அளித்தனர்
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி.N.அனுராதா அவர்கள் உத்தரவின்படி , சார்பு ஆய்வாளர் திரு. சங்கர் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 341, 302, 506(ii) ன்படி வழக்கு பதிவு செய்து, கொலையாளிகள், மற்றும் கொலையில் தொடர்புடையவர்கள்
1) கார்த்திகேயன்,
2)மணிகண்டன்,
3) விக்னேஷ்வரன்,
4) தக்ஷிணாமூர்த்தி,
5) கண்ணாயிரம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி அதன்பின் நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி