Police Department News

சென்னை1999 பேட்ச் காவலர்கள் சார்பில் 2 ஏட்டு குடும்பங்களுக்கு ரூ.26.4 லட்சம் நிவாரணம்: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை1999 பேட்ச் காவலர்கள் சார்பில் 2 ஏட்டு குடும்பங்களுக்கு ரூ.26.4 லட்சம் நிவாரணம்: போலீஸ் கமிஷனர் வழங்கினார்

சென்னை: பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவலர்கள் குடும்பத்திற்கு 1999 பேட்ச் காவலர்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ.26.40 லட்சம் நிவாரண நிதியை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை மாநகர காவல் துறையில் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு கடந்த ஜூலை 3ம் தேதி உயிரிழந்தார். அதேபோல், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ராபர்ட் என்பவர் கடந்த ஜூலை 9ம் தேதி இறந்தார்.

உயிரிழந்த2 தலைமை காவலர்களுடன் 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் தமிழகம் முழுவதும் தலைமை காவலர் சபரிநாதன் முயற்சியால் ‘உதவும் உறவுகள்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைந்து நிதி திரட்டப்பட்டது. அந்த வகையில் 2500 பேர் இணைந்து நிதி உதவி வழங்கினர். இதன் மூலம், ரூ.26.25 லட்சம் நிதி திரட்டப்பட்டது. தகவலறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் 2 தலைமை காவலர் குடும்பத்திற்கு தனது நிதியாக தலா ரூ.7,500 என ரூ.15 ஆயிரம் வழங்கினார். அதைதொடர்ந்து மொத்தம் தலா ரூ.13.20 லட்சம் என மொத்தம் ரூ.26.40 லட்சம் நிதியை இறந்த 2 தலைமை காவலர் குடும்பத்திற்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார்.

போலீஸ் இ நியூஸ்
மதுரையிலிருந்து
M.அருள்ஜோதி
செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.