திடீர் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம், கத்தியைக் காட்டி வழிப் பறி செய்த ரவுடிகள் கைது
மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான திடீர் நகரில் வசித்து வருபவர் மருநாயுடு மகன் கண்ணன் வயது 38/2020, இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.
இன்று (28/08/2020) பகல் செல்லூர் பகுதிக்கு சவாரி சென்று திரும்பும் போது சுமார் 9.30 மணியளவில் மேலமாரட் வீதி சந்திப்பிலுள்ள வாரி ஹோட்டல் முன்பாக ஆட்டோவை நிறுத்தி விட்டு காபி குடிப்பதற்காக ஹோட்டலுக்கு சென்றார், அப்போது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் தங்களுக்கு மது குடிப்பதற்கு பணம் வேண்டும் என்று கேட்க, நீங்கள் யார், நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், பணமெல்லாம் தர முடியாது என்று சொல்ல, அதற்கு அவர்கள் நாங்கள் பெரிய ரவுடி என்று தெரிந்தும் எங்களுக்கு பணம் தர மாட்டேன் என்றா சொல்கிறாய், உன்னிடம் எப்படி பணம் வாங்க வேண்டுமென்று எங்களுக்கு தெரியும் என கூறிக் கொண்டே மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து நெஞ்சில் வைத்து அழுத்தியபடி எடு பணத்தை இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என மிரட்ட உடனிருந்த மற்றொரு ரவுடி சட்டை பையில் கையை விட்டு பையிலிருந்த 300 ரூபாய் எடுத்துக் கொண்டான்,
உடனே, பயத்தில் சத்தம் போட அக்கம் பக்கத்திருந்தவர்கள் ஓடி வர யாராவது என்னை பிடிக்க வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டியபடியே தப்பி சென்றனர்.
கொலை மிரட்டல் மூலம், பணத்தை பறி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் திடீர் நகர் C1, காவல் நிலையம் சென்று புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் U/S.392, r/w. 397, 506(ii) IPC யின் வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்தார்.
1) மேல வாசல் பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் நாகராஜன் என்ற அஜீத் நாகராஜன்,வயது 22.
2) அதே பகுதியை சேர்ந்த பாண்டி மகன் பாண்டியராஜன் வயது 26/2020,
ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி