Police Department News

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில், வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேயன்விளையில், வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளியே விரைந்து கண்டுபிடிக்க திருசெந்தூர் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டார்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்குட்பட்ட பேயன்விளை ஏ.ஐ.டி,யூ.சி காலனியில் சுதர்சன்செல்வபாபு என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார், இவர் குவைத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சுதர்சன்செல்வபாபு, மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மேற்படி பேயன்விளையிலுள்ள அவர்களது வீட்டை பூட்டி விட்டு சென்ற 5 ம் தேதி மாலை காயல்பட்டினம், கோமன்புதூரில் உள்ள அவரது உறவினர் இறந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

சென்ற 6 ம் தேதி, செல்வபாபு அவரது மனைவிக்கு போன் செய்து பேயன்விளையிலுள்ள அவர்களது வீட்டிலுள்ள கேமரா ஆப் காட்டுகிறது அதை என்னவென்று பார்க்க சொன்னதால் சுதர்சன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் நேரில் பேயன்விளையில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா வயரை அறுத்து வீட்டு பீரோவிலிருந்த 35 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளது தெரிந்தது. இது குறித்து சுதர்சன்செல்வபாபு ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ஜெயகுமார் அவர்கள் பேயன்விளையில் உள்ள சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து , திருச்செந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பாரத் அவர்கள் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், ஆகியோர் தலைமையில் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.