சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் (14.09.2020)
மானூர் காவல் நிலைய குற்ற எண் 400/20 பிரிவு 8(சி) உடன் இணைந்த 20(b)(ii)(B) போதை மருந்துகள் மனமயக்க பொருட்கள் சட்டம் 1985, வழக்கில் எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டம், மதவக்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன்களான உமேஷ் (30), முருகேசன் (32) ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராமர் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், உமேஷ், முருகேசன் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 14.09.2020 ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் சமர்பித்தார்.