கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாக கைது செய்யப்பட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். நச்சலூரில் இருந்து குளித்தலை நோக்கி சென்ற பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை நங்கவரம் அருகே மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி உடைத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேருந்தை ஓட்டிவந்த தற்காலிக ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பகுதியில் வசித்து வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரை குளித்தலை காவல்துறையினர் கைது செய்தனர்