சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடிய இருவர் மீதும் வழக்குப் பதிவு; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை;
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை சேர்ந்த சரவணன் தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 220 பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு காலையில் எழுந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணமல் போனதை கணடு அதிர்ச்சி அடைந்தார் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் மேலும் வட சென்னையில் தொடர்ந்து இரு சக்கர வாகனம் திருடு போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை சரக துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர் இந்நிலையில் வண்ணாரப்பேட்டை போலீசார் மூலக்கொத்தளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது போலீசாரை பார்த்து இருசக்கர வாகனத்தை வேகமாக போட்டி சென்றதால் போலீசார் விரட்டி பிடித்து விசாரணை செய்த போது கோடம்பாக்கம் சின்ன ராஜா பிள்ளை தெருவை சேர்ந்த சாய்கிருஷ்ணன் என்பதும் அடையார், அசோக் நகர், கோடம்பாக்கம், நூங்கம்பாக்கம், எம், ஜி ஆர் நகர், உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்து காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கொல்லையடிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை குறைந்த விலைக்கி வாங்கி அதிக விலைக்கு வெளிமாவட்டங்களில் விற்பனை செய்வதும் தெரியவந்தது
மேலும் சாய்கிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் அரவி (எ) அரவிந்தனை கைது செய்து அவனிடம் இருந்து விலை உயர்ந்த யமஹா பல்சர் 220, இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணையில் இரவு நேரங்களில் அரவிந்தன் வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பல்சர் 220 வாகனத்தை திருடி 10,000 முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரை விற்று வந்ததாகவும் தெரியவந்தது இருவர் மீது திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, இராயபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர் இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.