Police Department News

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் பறிமுதல் – 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு .

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரிடியம் போன்ற பொருள் மற்றும் 2 வீச்சரிவாள்கள் பறிமுதல் – 4 பேர் கைது. கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
.

தூத்துக்குடி, முத்தையாபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் தங்கம் (55) என்பவருக்கு, எதிரிகள் தாளமுத்துநகர், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த அந்தோணி பிச்சை மகன் மரியதாஸ் (49) என்பவர் மற்றும் தூத்துக்குடி கதிர்வேல் நகர் 2வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன் (47) என்பவர்கள் நன்கு அறிமுகமானவர்கள். இவர்கள் மேற்படி தங்கத்திடம், மற்ற எதிரிகளான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் காசியம்பலம் தெருவைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் வைத்தியலிங்கம் (60) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் புளியங்குடியைச் சேர்ந்த கருபண்ணன் மகன் முத்துராமலிங்கம் (45) ஆகியோர் இரிடியம் என்னும் பொருள் வைத்திருப்பதாகவும், அதை விற்றுக்கொடுத்தால் நல்ல கமிஷன் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அதனடிப்படையில் மேற்படி தங்கம் என்பவர், அவரது மகன் வினோத்குமாருடன் நேற்று (26.09.2020) இரவு தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, அங்கு மேற்படி எதிரிகள் மரியதாஸ், முருகன் நின்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் இன்னோவா காரில் வந்த மற்ற எதிரிகளான வைத்தியலிங்கம் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர், தங்களிடம் உள்ள இரிடியம் என்னும் பொருளை தங்கத்திடம் விற்றுத்தருமாறு கேட்டுள்ளனர். இதில் சந்தேகமடைந்த தங்கம் விற்றுத் தர இயலாது என்று கூறியுள்ளார். உடனே அவர்கள் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மேற்படி தங்கம் என்பவர் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் திரு. சங்கர், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன், புதியம்புத்தூர் தனிப்பிரிவு காவலர் திரு. விக்னேஷ் மற்றும் சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் திரு. கலைவாணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை தேடி ரோந்து சென்றபோது இன்று காலை தாளமுத்து நகரிலுள்ள வட்டக்கோவில் அருகே மேற்படி இன்னோவா காரில் வந்தவர்களை மடக்கிப்பிடித்து, அவர்களிடமிருந்த திரவி நிலையில் இரிடியம் போன்ற பொருள் உள்ள 6 குப்பிகள் அடங்கிய சிறிய கண்டெய்னர் பெட்டி, மற்றும் இரிடியம் பற்றிய விபரங்கள் அடங்கிய குறுந்தகடு (CD), அரிவாள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இன்னோவர் கார் (TN 59 BB 0909) ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த குப்பிகளில் 144 மில்லி கிராம் இரிடியம் போன்ற பொருள் திரவ நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. கைது செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படையிரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.