Police Department News

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள பெண் ஒருவர் தனது சகோதரனுடன் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி பகுதியை சேர்ந்த சங்கீதா வயது 21, என்பவர் தனியார் மருத்துவ மனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்
இவருக்கு வரும் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அதே பகுதியை சேர்ந்த நபருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணி முடித்து தனது சகோதரனுடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது சங்கீதா கடத்தப்பட்டுள்ளார் இரு சக்கர வாகனத்தை வழிமறித்த நபர்கள் சகோதரனை தாக்கி விட்டு சங்கீதாவை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்ணை கடத்திய நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தெடி வருகின்றனர்.

uம் நிச்சயிக்கப்பட்ட அப்பெண் கடத்தப்பட்டிருப்பதால் , ஒரு தலையாக காதலித்த ஏதேனும் ஒரு நபரின் வேலையாக இருக்குமா? அல்லது குடும்ப முன் விரோதாமாக இருக்குமா? என காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.