மதுரை, திடீர் நகர் பகுதியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இடத்தில் மனைவியை தாக்க முயற்ச்சித்த கணவன் மீது வழக்கு பதிவு
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி பாலசரஸ்வதி. கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் மனைவி மதுரை, தெற்கு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கணவரை விசாரணை நடத்த காவல் நிலையத்தினர் அழைத்திருந்தனர். அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே , காவல் நிலையத்தினர் முன்னரே, காவல் நிலையத்தில் வைத்து மனைவியை தாக்க முயற்ச்சித்தார் இதை கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். உடனை அவரை கைது செய்து திடீர் நகர் காவல் நிலையத்தில் வைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.