மதுரை மாவட்டத்தில், உங்கள் குறைகளை கேட்க ” உங்களைத் தேடி” எனற திட்டம் அறிமுகம்.
மதுரை மாவட்டத்தில் ‘உங்கள் குறைகளை கேட்க உங்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ் புகார் தெரிவித்தால் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி., சுஜீத்குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாக கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்களில் மட்டும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர். மற்ற புகார்களை ஸ்டேஷனில் இரு தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் சாட்சிகளிடம் விசாரணை போன்றகாரணங்களால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, புகார் குறித்து நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என போலீசாருக்கு எஸ்.பி., சுஜீத்குமார் உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரை விசாரித்து நடவடிக்கை எடுப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.