Police Department News

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

தேவர் குருபூஜைக்காக, முதல்வர் மதுரை வருகை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பங்கேற்க முதல்வர் ஏடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அக்டோபர் 30 ல் மதுரை வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் ஆலோசனை நடத்தினார்

ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில்
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் அக்டோபர் 30 ல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் பல் வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்

இதையொட்டி தென் மண்டல ஐ.ஜி. முருகன், மேற் பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே டி.ஜி.பி.திரிபாதி அவர்கள் நேற்று மதுரை வந்தார். அவர் மதுரை அவுட்போஸ்ட பகுதியில் உள்ள IPS அதிகாரிகள் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்தார்.

அவரை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், தென் மண்டல ஐ.ஜி. முருகன் அவர்கள், டி.ஐ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சந்தித்து பேசினர், சட்டம், ஒழுங்கு பிரச்சனை, முதல்வர் வருகை, தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அவரிடம் விளக்கினர். பின்பு அவர் சென்னை சென்றதாக காவல் துறை வட்டம் கூறினர். இதற்கிடையில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ் அவர்கள் நேற்று மாலை மதுரை வந்தார் அவர் முதல்வர் வருகை மற்றும் தேவர் ஜெயந்தி ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு மேற் கொள்வார் என்று காவல் துறை யினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.