Police Department News

சிறந்த புலனாய்வுக்காக தமிழக காவல் துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது.

சிறந்த புலனாய்வுக்காக தமிழக காவல் துறை அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் குற்றப்புலனாய்வில் சிறந்து விளங்கும் காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள், மற்றும் காவலர்கள் பதக்கம் பெற உள்ளார்கள்

இதற்கான பட்டியலில் தமிழகத்திலிருந்து 5 காவல் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சென்னை போக்குவரத்து, கூடுதல் ஆணையர். கண்ணன் அவர்கள், கியூ பிரிவு எஸ்.பி. மகேஷ் அவர்கள், திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்து அவர்கள், கோவை சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. பண்டாரிநாதன் அவர்கள், எஸ்.பி.சி.ஐ.டி. தனிப்பிரிவு ஆய்வாளர் திரு. தாமோதரன் அவர்கள் ஆகியோர் இப்பதக்கப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.