Police Recruitment

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை

மதுரை, பனையூரில் தன் மனைவிக்கு குழந்தை பிறந்த தகவலை சொல்லாததால், மாமியாரை அடித்த மருமகன், மாமியார் போலீசில் புகார், வழக்கு பதிவு. மதுரை விளக்குதூண் போலீசார் விசாரணை

மதுரை,பனையூர், சொக்கநாதபுரத்தில் வசிக்கும் பாஸ்கரன் மனைவி ஜெயந்தி வயது 46/2020, இவரது கணவர் பாஸ்கர் CISF காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், இவர்களுக்கு ரோஜா என்ற மகளும், சூரியபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர், இவர்கள் தங்கள் மகள் ரோஜாவை மதுரை சூரியா நகரில் குடியிருந்து வரும் தவமூர்த்தி என்பவரின் மகனும் வழக்கறிஞருமான சதீஸ்குமார் என்பவருக்கு கடந்த 08/12/2019 ம் தேதியன்று திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்த 3 மாதத்தில் மருமகனிடம் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கரப்பிணியான தங்கள் மகள் மருமகன் சதீஸ்குமாரை விட்டு பிரிந்து வந்து இவர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9 ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டதால் தங்கள் மகளை கிறிஸ்தவ மிஷின் மருத்துவ மனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். காலை சுமார் 10 மணியளவில் தங்களின் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகளுக்கு உதவியாக ஜெயந்தியின் தாயார் தங்கம் மற்றும் ஜெயந்தியின் தம்பி மனைவி காளீஸ்வரி ஆகியோர் மருத்துவமனையில் இருந்தனர். ஜெயந்தியின் மருமகன் தன் மனைவிக்கு குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு இரவு சுமார் 9 மணிக்கு தன் தம்பி மனோஜ்குமார், மற்றும் தனது இரு நண்பர்களுடன் குழந்தையை பார்க்க மருத்துவ மனைக்கு வந்தவரகள், ஜெயந்தியை பார்த்து அசிங்கமாகவும், மரியாதை குறைவாகவும் பேசி ரகளை செய்துள்ளனர் அதன்பின் ஜெயந்தியின் தாயார் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்து அவரையும் அடித்துள்ளனர், ஆக சதீஸ்குமார், அவரது தம்பி மனோஜ்குமார், மற்றும் அவர்களது இரண்டு நண்பர்கள் ஆகியோர் ஜெயந்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விட்டு சென்றுள்ளனர், இதனை தொடர்ந்து ஜெயந்தி அவர்கள் மதுரை விளக்குத்தூண் B1, காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை புகார் அளித்துள்ளார், புகாரை பெற்று கொண்ட காவல் ஆய்வாளர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தார்கள். ஆய்வாளரின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.ஜெயமாணிக்கம் அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.