மதுரையில் 144 உத்தரவை மீறிய 3 பேர் மீது பாய்ந்தது வழக்கு
மதுரை மாநகரில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
தமிழகம் கொரோனா பாதிப்பிலிருந்து கணிசமான அளவு குறைந்து இருந்தாலும் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதியிலான விளக்குத்தூண், தெற்கு வாசல் மற்றும் தல்லாகுளம் பகுதியில் 144 தடையுத்தரவை மீறியதாக 3 வழக்குகள் நேற்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.