Police Department News

கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் பணியிட மாற்றம் : DGP உத்தரவு

ஆய்வாளர் பெரியபாண்டியன் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனி சேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையின் போது ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அப்போது கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர்தான் தவறுதலாக பெரியபாண்டியனை சுட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு உள்ளது. இதனிடையே சில நாட்கள் விடுப்புக்குப் பின் முனிசேகர் கொளத்தூர் ஆய்வாளராகவே பணியில் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் கொளத்தூர் ஆய்வாளராக இருந்த முனிசேகர் பணியிடம் குறிப்பிடப்படாமல் தெற்கு மண்டலத்துக்கு டி.ஜி.பியால் மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.