சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து திருடமுயன்ற திருடர்களை S-14 காவல்துறையினரால்கைது செய்ததையொட்டி அப்பகுதி மக்கள் காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.
பீர்க்கங்கரணை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்கநகைகளை திருடிய வழக்கில் மேலும் ஒருவரான அன்வர் (எ) பன்னீர் செல்வம் என்பவர் S-14 பீர்க்கன்காரணை காவல் குழுவினரால்கைது. 12 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டது.(12.02.2021).
S-14 PEERKANKARANAI POLICE NAB ANOTHER ACCUSED IN CONNECTION WITH HOUSE BURGLARY IN PEERKANKARANAI AREA – 12 SOVEREIGN GOLD JEWELS SEIZED(12.02.2021)
சென்னை, முடிச்சூர், பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், வ/70, என்பவர் கடந்த 03.08.2020 அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 15 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக ரங்கநாதன் S-14 பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,. S-14 பீர்க்கன்காரணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டும் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகைகளை திருடிய குற்றவாளி ஆரிப் பிலிப் என்பவரை கடந்த 18.10.2021 அன்று கைது செய்தனர். ஆரிப் பிலிப் கொடுத்த தகவலின்பேரில் காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி அன்வர் (எ) பன்னீர் செல்வம், வ/40, , பழைய வண்ணாரப்பேட்டை, என்பவரை 12.02.2021 அன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளிடமிருந்தும் புகார்தாரரின் 12 சவரன் தங்கநகைகள் மீட்கப்பட்டது.
அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.