Police Recruitment

ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது

விருதுநகர் மாவட்டம்:-

ஶ்ரீவில்லிபுத்தூரில் இரிடியம் மோசடி சம்பந்தப்பட்ட வழக்கில் மூவர் கைது…

ஶ்ரீவில்லிபுத்தூரில் அத்திகுளம் கருப்சாமி கோவில் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது24 த/பெ முருகன்.

தங்கமாரியப்பன் 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் இருப்பினும் எலக்ட்ரானிக்ஸ் மீது அதிக ஆர்வம் இருந்ததால் கோயம்புத்தூர் சென்று (6 வருடம்) வேலை செய்துள்ளார்.

தற்போது நான்கு வருடமாக ஶ்ரீவில்லிபுத்தூரில் மேட்டுதெருவில் வெள்ளைச்சாமி மகன் ரமேஷ் டிவி பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தங்கமாரியப்பனுக்கு பழக்கமான தேனியை சேர்ந்த மூக்கையா எலக்ட்ரானிக் போர்டு செய்து தரவேண்டும் என்று சொல்லி பாண்டிசேரியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவரை அறிமுகம் செய்துள்ளார்.

ஜெயசங்கர் செம்புகுடத்திற்குள் எலக்ட்ரானிக்ஸ் போடு வைக்கவேண்டும் நாங்கள் இரிடியம் குடம் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் எனவும்.

நாங்கள் சொன்ன மாதிரி வேலையை செய்து கொடுத்தால் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று சொல்லி ஶ்ரீவில்லிபுத்தூர் மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் அருகே ஒரு பொலிரோ காரில் வைத்து பேசி பதினைந்து நாட்களுக்கு முன்பு ஒரு லடசம் ரூபாயை கொடுத்துள்ளனர் அப்போது மங்கள்ரேவு வை சேர்ந்த முருகன் என்பவர் உடன் இருந்திருந்துள்ளார்.

அதன்பின்பு இதற்கு தேவையான பொருட்களை மதுரையில் இருந்து வாங்கி வந்து டிவி மெக்கானிக் வேலை பார்க்கும்கடையில் வைத்து தயார் செய்திருக்கிறார்.

ஆனால் அவர்கள் சொன்னதுபோல் செய்ய முடியவில்லை, இந்த தகவலை தங்கமாரியப்பன் ஜெயசங்கரிடம் தொலைபேசியில் நீங்கள் சொன்னது போல் எனக்கு செய்ய தெரியவில்லை, நான் உங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன்,இப்போது என்னிடம் பொருட்கள் வாங்கியது போக மீதம் 40,000/- உள்ளது என்றும் பாக்கி பணம் 60,000/- ஒரு மாதத்திற்குள் திருப்பி தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் இதை செய்ய சொன்ன ஜெயசங்கர் தங்கமாரியப்பன் சொன்ன பின்பும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியிருக்கிறார் அதானால் ஜெயசங்கர் போன் சேய்தால் தங்கமாரியப்பன் போனை எடுப்பதில்லை.

அதன்பிறகு மங்கள்ரேவு வை சேர்ந்த முருகன் ஏன்பவர் தங்கமாரியப்பனின் வீட்டுக்கு சென்று அவரது அம்மாவிடம் உங்கள் மகன் எங்களுக்கு 1,00000/- லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொன்னவுடன் அவரை வீட்டில் இருந்து இழுத்து வந்து வழுக்கட்டாயமாக பொலிரோ வண்டியில் ஏற்றிக்கொண்டு தங்கமரியப்பனுக்கு போன் செய்து உங்க அம்மாவை கடத்தி வந்துவிட்டதாகவும் நீ இங்கு வந்தால் விட்டு விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

உடனே தங்கமாரியப்பன் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்திருக்கிறார் என்னுடைய அம்மாவை விட்டுவிடுங்கள் என்று சொன்னதும் அவரது அம்மாவை விட்டுவிட்டு தங்கமாரியப்பனை பொலிரோ காரில் ஏற்றி கொண்டு சென்று விட்டனர் .

அந்த காரில் ஜெயசங்கர் உட்பட 12பேர் இருந்ததாகவும் அந்த கார் ஊருக்கு வெளியே ஒரு மலையடிவாரத்திற்கு சென்றிருக்கிறது அங்கு வைத்து நாங்கள் கொடுத்த பணத்தை கொடு என்று கேட்டுள்ளனர்.

பணம் இல்லை என்று சொன்னவுடன் உருட்டு கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

பின்னர் கத்தி, அறிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு மிரட்டியுள்ளனர் .

நான்கு பத்திரங்களில் தங்கமாரியப்பனிடம் கையெழுத்து வங்கிவிட்டு வாங்கிய பணத்தை இன்னும் ஒரு வாரத்தில் கொடுக்கவேண்டும் என்று சொல்லி அழைத்து சென்ற இடத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதை போலீசில் சொல்ல கூடாது மீறி சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

கட்டைகளை கொண்டு தாக்கியதில் காயமடைந்த தங்கமாரியப்பன் ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுகொண்டார்.

பின்னர் நகர் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் மனுவில் எழுதிக்கொடுத்தார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட நகர் ஆய்வாளர் திரு பாஸ்கர் தலைமையில் நகர் சார்பு ஆய்வாளர் திரு பாபு அவர்களுடன் தனிபடை அமைத்து அடுத்தக்கட்ட புலண் விசாரணையை மேற்கொண்டனர்.

மேற்படி இந்த விசாரணையில் ஶ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மூன்று நபர்களுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்னர் அவர்களின் விபரம் பின்வருமாறு…

1.பொண்ணுச்சாமி வயது 63 த/பெ முத்தையாதேவர்

2.முத்து வயது 45. த/பெ வைகுண்டம்

3.மதன்குமார் வயது 23 த/பெ முருகன்

இந்த மூன்றுபேரையும் கைது செய்து குற்றபத்திரிக்கை பதியபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பாண்டிசேரி ஜெயசங்கர் மற்றும் மங்கள்ரேவு முருகனை தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.