Accidents

விழுப்புரத்தில் பின்னால் வந்த லாரி மோதி காவலர் உயிரிழப்பு

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவலர் ஒருவர் பின்னால் வந்த லாரி மோதி பலியானார். பெரியதச்சூர் காவல் நிலைய காவலரான பிரகாஷ், நேற்றிரவு பணி முடிந்து சொந்த ஊரான சூரப்பட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கே.வி.கே. திரையரங்கின் அருகே, பின்னால் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் கீழே விழுந்த பிரகாஷ் பலத்த காயத்துடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நிறுத்தாமல் சென்ற லாரியை, சிட்டாம்பூண்டி என்ற இடத்தில் பிடித்த செஞ்சி போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர். லாரி வேகமாக இயக்கப்பட்டதும்,விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.