மதுரையில் 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு
மதுரை தல்லாகுளம் பகுதியில் சட்டசபை தேர்தலையொட்டி 385 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகங்களின் உத்தரவின்பேரில் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட காவல் நிலயங்களில் ஒப்படைக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதில் மதுரை மாவட்ட காவல்துறையின் கீழ் வரும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 452 உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் 385 துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் உரிமையாளர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். இதன்படி 56 துப்பாக்கிகள் வங்கிகள், உள்ளிட்ட தவிர்க்கமுடியாத பாதுகாப்பு பணிக்காக வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 துப்பாக்கிகள் ஓரிரு நாளில் உரியவர்களிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.சுஜித்குமார் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்,