Police Department News

மதுரை, தத்தனேரி பகுதியில் குடிக்கு அடிமையான வாலிவர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, தத்தனேரி பகுதியில் குடிக்கு அடிமையான வாலிவர் தூக்கு போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை தத்தனேரி, களத்துப் பொட்டடல், ராமச்சந்திரநகரில் வசிக்கும் கோவிந்தன் மகன் சேகர் வயது 55/21, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார், இவரது மனைவி நிர்மலா, இவர்களுக்கு ராஜா மற்றும் பிரகாஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜாவிற்கு திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகிறார், இளைய மகன் குட்டையாக இருப்பதால், இவரை குட்டை பிரகாஷ் என்று அழைப்பார்கள். இவருக்கு திருமணம் ஆகவில்லை, இதனால் அடிக்கடி குடித்து குடிக்கு அடிமையாகிவிட்டார். இந்த நிலையில் இவர் கடந்த 3 ம் தேதி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் இதை கண்டித்த தன் தாயார் நிர்மலாவை அடித்து தள்ளிவிட்டு வீட்டிற்குள் சென்று கதவையடைத்துக் கொண்டார், உடனே நிர்மலா பக்கத்தில் குடியிருக்கும் தனது உறவினர்களை அழைத்து வந்து ஜன்னல் வழியாக பார்த்த போது பிரகாஷ் தன் வேஷ்டியால் தனக்கு தானே தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார், உடனே கதவை உடைத்து உள்ளே சென்று அரிவாள்மனையால் வேஷ்டியை அருத்து அவரை கீழே இறக்கிப் பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருந்தார், உடனே அவரது தந்தைக்கு தகவல் கூற அவரும் நேரில் வந்து பார்த்து செல்லூர் D2, காவல்நிலையத்தில் சம்பவத்தை புகாராக கொடுத்து சட்டப்படி விசாரணை நடத்தும்படி கூறினார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.