Police Department News

பேரூந்து படிக்கட்டில் பயணிப்பது சட்டப்படி குற்றம் இனி தவறு செய்ய மாட்டேன் என மாணவர்கள் உறுதி மொழி

பேரூந்து படிக்கட்டில் பயணிப்பது சட்டப்படி குற்றம் இனி தவறு செய்ய மாட்டேன் என மாணவர்கள் உறுதி மொழி

மதுரையில் நேற்று முன் தினம் அரசு பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த 9ம் வகுப்பு மாணவர் பிரபாகரன் தவறி விழுந்து இறந்தார். இதை தொடர்ந்து நேற்று போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு மாணவர்களிடம் உறுதிமொழி பெற்றனர்.

மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மற்றும் போக்குவரத்து காவல் துணை கமிஷனர் ஆறுமுகசாமி ஆகியோர் உத்தரவிட்டனர். கூடுதல் துணைகமிஷனர் திருமலைக்குமார் தலைமையில் உதவி கமிஷனர்கள் மாரியப்பன், செல்வின் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ரமேஷ்குமார், தங்கமணி, கார்த்திக், நந்தகுமார், பூர்ணகிருஷ்ணன், கணேஷ்ராம், பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் நேற்று நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்த மாணவர்களை இறங்கச்செய்து எச்சரித்து அறிவுரை கூறினர். ‘பஸ் படிக்கட்டில் பயணிப்பது சட்டப்படி குற்றம் என விளக்கினர். இதைதொடர்ந்து மாணவர்களை இனி மேல் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்கச்செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.