Police Department News

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு.

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் திரு பாபு. மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் 48,922 ரூபாய் பணத்தை அப்படியே அவரின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் இந்த தீபாவளி துக்கதீபாவளியாக […]

Police Department News

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியை சேர்ந்த (48) வயது மதிக்கத்தக்கவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து 01.10.2020 அன்று சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், u/s 7 & 8 of POSCO Act -ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Police Department News

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது

மதுரையில், சாலையோர கடைக்கு அனுமதி வாங்கித் தருவதாக கூறி 1.5 லட்சம் ரூபாய் மோசடி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கைது மதுரை மாநகர், பொன்னகரம், 2 வது தெரு டோர் நம்பர் 15 ல் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் வடிவேல் மகன் கோவிந்த ராஜ் வயது 57/2020, இவர் மதுரை நகரப் பகுதியில் மாநகராட்சி பெட்டிக்கடை ஒன்று வைத்து நடத்த எண்ணினார், இதனை தொடர்ந்து, மதுரை, பழைய ஆஸ்டின்பட்டி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு […]

Police Department News

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்க காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையே முன்னின்று காஞ்சிபுரம் – கீழம்பி புறவழிச் சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்வு வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று கரையோரம் செய்யார் மற்றும் வந்தவாசியிலிருந்து வரும் வாகனங்கள் வேலூர் செல்ல கீழம்பி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்த நிலையில் பாலாற்றின் கரையோரம் வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் சாலை […]

Police Department News

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல்

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம்: வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தகவல் தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக டிஜிபி சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு, முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் டிஜிபி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவுடிகளை ஒழிக்க, புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் விரைவில் இது தொடர்பாக […]

Police Department News

நாங்குநேரி இரட்டை கொலையில் திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண்

நாங்குநேரி இரட்டை கொலையில் திருச்சி கோர்ட்டில் 3பேர் சரண் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி, மாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி சண்முகத்தாய்(50). இவர்களது மகன் நம்பிராஜன்(21). இவரும், தங்கப்பாண்டி மகள் வான்மதியும்(18) கடந்தாண்டு அக்டோபரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெண் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நெல்லை டவுனில் தனி வீடு எடுத்து தம்பதியர் வசித்து வந்தனர். கடந்தாண்டு நவ.25ம் தேதி இரவு வான்மதியின் […]

Police Department News

கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இளையான்குடி காவல் ஆய்வாளர் புதிய முயற்சி

கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இளையான்குடி காவல் ஆய்வாளர் புதிய முயற்சி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன இந்த ஊராட்சிப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளையான்குடி காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதிகளிலும் அந்தப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் சிசிடிவி பொருத்தி ஆய்வு மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற […]

Police Department News

மதுரை தெப்பகுளம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம், எல்.இ.டி டிவியை திருடி சென்ற திருடன், போலீசார் வலை வீச்சு

மதுரை தெப்பகுளம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணம், எல்.இ.டி டிவியை திருடி சென்ற திருடன், போலீசார் வலை வீச்சு மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி, இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தன் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் வீட்டின் முன்பக்கக்கதவை உடைத்து வீட்டிலிருந்த 5 பவுன் தங்கநகை, 50,000/ ரூபாய் ரொக்கம், மற்றும் எல்.இ.டி.டிவி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான். வெளியூர் சென்ற வேலுமணி திரும்பி வந்து பார்த்த போது தன் வீட்டின் […]

Police Department News

ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் இளம் பெண் மர்மமான முறையில் கொலை

ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் இளம் பெண் மர்மமான முறையில் கொலை இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம், பேரூராட்சியில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கெளசல்யா வயது 21/2020, இளம் பெண் மரமமான முறையில் இறந்து கிடந்தார். அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் உடலை கைப்பற்றி மோப்ப நாய் ஜுலியை வரவழைத்து கொலையா?, ற்கொலையா?? என விசாரணை செய்து வருகின்றனர்.

Police Department News

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 17 பேர் இறந்து விட்டதால், […]