கிராமப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க இளையான்குடி காவல் ஆய்வாளர் புதிய முயற்சி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவில் 55 ஊராட்சி மன்றங்கள் உள்ளன இந்த ஊராட்சிப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளையான்குடி காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற பகுதிகளிலும் அந்தப் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையில் சிசிடிவி பொருத்தி ஆய்வு மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது இளையான்குடி காவல்துறையினரின் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் இடமும் பொதுமக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி காவல்துறையினரின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டத்தில் இளையான்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.